News March 3, 2025

பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் நேரில் ஆஜராக உத்தரவு 

image

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் வரும் மார்ச்.7ல் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வாபஸ் பெற்றால்தான் பதவி உயர்வு வழங்க முடியும் என பதிவாளர் கடிதம் எழுதியிருந்த நிலையில், ஆஜராக உத்தரவு. பெரியார் பல்கலைக்கழகத்தில் உதவியாளர்களாக பணியாற்றிய குழந்தைவேல் உள்ளிட்டோர் பணி உயர்வுக்கோரி 2013ல் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

Similar News

News March 4, 2025

IOB வங்கியில் வேலை டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு

image

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (Indian Overseas Bank) 750 அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்னப்பிக்கலாம். மார்ச்.09க்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஊக்கத்தொகை: ரூ. 15,000 ரூபாயாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க இங்கே <>க்ளிக்<<>> செய்யவும். இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும்.

News March 4, 2025

பிளஸ் 2 பொதுத்தேர்வு- சேலத்தில் 280 பேர் ஆப்சென்ட்

image

சேலம் மாவட்டத்தில் 151 தேர்வு மையங்களில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியது. தமிழ் பாடத் தேர்வை 37,095 மாணவ, மாணவிகள் எழுதினர். 280 பேர் தேர்வு எழுத வரவில்லை என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் தெரிவித்துள்ளார். இதனிடையே, 300 பறக்கும் படை அலுவலர்கள், 3,100 அறை கண்காணிப்பாளர்கள், 3,500-க்கும் மேற்பட்ட தேர்வு பணியாளர்கள் தேர்வுப் பணியில் ஈடுபட்டனர்.

News March 4, 2025

சேலத்தில் மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பலி

image

பழனிவேல் என்பவர் பனமரத்துப்பட்டி காந்தி நகர் பகுதியில் கோழி இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவரது மகன் மவுலீஸ்வரன் (வயது 13) 8ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று கோழி இறைச்சி சுத்தம் செய்யும் எந்திரத்தை மவுலீஸ்வரன் போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மாணவனை மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பனமரத்துப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!