News April 25, 2025
பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆஜர்

பல்கலைக்கழக விதிமுறைகளை மீறி தனியார் அமைப்பு தொடங்கி அதன் மூலமாக முறைகேடு நடந்ததாக பதிவுச் செய்யப்பட்ட வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு காவல்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன் இன்று (ஏப்.25) சூரமங்கலம் காவல் உதவி ஆணையாளர் அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்.
Similar News
News October 18, 2025
சேலம்: 2,708 ஆசிரியர் பணியிடங்கள்! APPLY NOW

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்!
மொத்த பணியிடங்கள்: 2,708
கல்வித் தகுதி: PG, Ph.D, NET, SLET, SET படித்திருந்தால் போதும்.
சம்பளம்: ரூ.57,700 முதல் ரூ.1,82,400 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.11.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
News October 18, 2025
சேலம் வழியே புதிய ரயில் சேவை தொடக்கம்!

இந்திய ரயில்வேயால் இயக்கப்படும், அதிவிரைவு ரயில்வே சேவையான அம்ரித் பாரத் ரயில், இந்த ரயில் சேவையானது, சென்னையிலிருந்து புறப்பட்டு, சேலம் வழியாக கோவை வரை இயக்கப்படுகிறது. குறைந்த கட்டணத்துடன், ஸ்லீப்பர் மற்றும் அதிகப்படியான முன்பதிவு அல்லாத பெட்டிகளை கொண்டு இயக்கப்படுகிறது. இந்த ரயில் சேவை வரும் டிசம்பர் மாதம் முதல் இயக்கப்படுவதாக, சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 18, 2025
சேலத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை!

சேலம் அமானி கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி மோகன்குமார் (30), அடிக்கடி உடல்நலக்குறைவால் மனமுடைந்து நேற்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கொண்டலாம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.