News April 3, 2025
பெரியகுளத்தில் பயங்கரம் – சிறுவன் கொலை

பெரியகுளத்தை சேர்ந்த ஆனந்தி(43) தனது தம்பி பாண்டீஸ்வரன்(33), மகன் நிஷாந்த்(14) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். கூலி வேலை செய்யும் பாண்டீஸ்வரன் ஏப்ரல்.1 அன்று மது அருந்த பணம் கேட்டு ஆனந்தியிடம் தகராறு செய்துள்ளார். பணம் தரமறுத்த ஆனந்தியையும் சிறுவன் நிஷாந்தையும் இரும்பு கம்பியால் பாண்டீஸ்வரன் தாக்கியதில் சிறுவன் உயிரிழந்தான். போலீசாருக்கு பயந்து பாண்டீஸ்வரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Similar News
News April 12, 2025
தேனியில் 106 சமையல் உதவியாளர் பணி

தேனியில் உள்ள மாவட்ட பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 106 சமையல் உதவியாளர் பணியிடங்களில் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளன. தேர்வான ஓராண்டுக்கு தொகுப்பூதியமும், அதன் பின்பு சிறப்பு காலமுறை ஊதியமும் வழங்கப்படும். 10-ம் வகுப்பு தோல்வி, தேர்ச்சி பெற்ற 18- 40 வயதுள்ளவர்கள் வரும் ஏப். 29க்குள் சம்பந்தப்பட்ட ஒன்றியம், நகராட்சி, அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.*SHARE பண்ணவும்
News April 12, 2025
தேனி:டாக்டரிடம் பழகி திருமணம் செய்து ரூ.9.69 லட்சம் மோசடி

தேனியை சேர்ந்தவர் நரேந்திர பிரசாத் 28. டாக்டரான இவர் சென்னையில் பணி செய்கிறார். இவரிடம் முகநுாலில் ஈரோட்டை சேர்ந்த நந்தினி என்பர் பழகினர். பின்பு இருவரும் திருமணமும் செய்து கொண்டனர். நந்தினி சமூக வலைதளங்களில் பல ஆண்களுடன் பேசினார். இதனை தட்டி கேட்ட நரேந்திர பிரசாத்தை கொலை செய்துவிடுவேன் என மிரட்டினார். மேலும் ரூ.9.69 லட்சம் வரை மிரட்டி வாங்கியுள்ளா். நந்தினி உட்பட 4 பேர் மீது வழக்கு
News April 11, 2025
தேனி : SSLC படித்தவர்களுக்கு அரசு வேலை

தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் 106 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி/தோல்வியடைந்த 21 வயது முதல் 40 வயது வரை உள்ள பெண்கள் மட்டும் <