News April 9, 2025

பெரம்பலூர்: 10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காலியா உள்ள ரீடைல் சேல்ஸ் அசோசியேட் (Retail Sales Associate) பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.15,000 வரை வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ள 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் <>இங்கே க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்கள்.

Similar News

News December 19, 2025

பெரம்பலூர்: ஆட்டோ வாங்க ரூ.3 லட்சம்!

image

பெரம்பலூர் மக்களே மின்சார ஆட்டோ வாங்க பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிருக்கு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், கூட்டுறவு வங்கிகள் மூலமாக ரூ. 3 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் 1,000 பேருக்கு கடன் வழங்கப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வாகன விலை விவர அறிக்கை, வருமானச் சான்று, ஆதார், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களுடன் உங்களுக்கு அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகளை அணுகலாம்.

News December 19, 2025

பெரம்பலூர்: 75 நாட்களில் 1.5 லட்சம் திட்டம்!

image

பெரம்பலூர் மாவட்டம், எறையூர் பகுதியில், ஜவஹர்லால் நேரு பொதுத்துறை சர்க்கரை ஆலை உள்ளது. சர்க்கரை ஆலையின் தலைமை நிர்வாகியான, டிஆர்ஓ பன்னீர்செல்வம் தலைமையில் நடப்பு (2025-2026) ஆண்டுக்கான அரவைப் பணிகளுக்காக ஆலை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சர்க்கரை ஆலையில் இன்று முதல் அரவைப் பணிகள் தொடங்கவுள்ள சூழலில், 75 நாட்களில் சுமார் 1.5 லட்சம் டன் கரும்புகளை அரைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

News December 19, 2025

பெரம்பலூர்: ஆட்சியரகத்தில் சிறப்பு கடன் முகாம்

image

பெரம்பலூர் மாவட்ட தொழில் மையம் மற்றும் பல்வேறு துறைகளின் சார்பில், பொதுமக்களுக்கு கடன் வழங்கும் முகாம் நேற்று மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மேலும் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், 34 பயனாளிகளுக்கு ரூ.1.16 கோடி மதிப்பில் கடனுதவிகளை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பல்வேறு முன்னோடி வங்கிகள் மற்றும் அரசு அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!