News April 15, 2024

பெரம்பலூர் : வனத்துறையினர் எச்சரிக்கை

image

பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் இரண்டு சிறுத்தைகள் புகுந்துள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோவுடன் பொய்யான செய்தி உலா வந்து கொண்டிருக்கின்றது.
இது தவறான தகவலாகும். இது போன்று பொதுமக்களை பீதிக்குள்ளாக்கும் வகையிலான செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என
பெரம்பலூர் மாவட்ட வன அலுவலர் இரா.குகனேஷ் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 22, 2025

பெரம்பலூர்: சாலை விபத்தில் முதியவர் பலி

image

தெரணி கிராமத்தைச் சேர்ந்த கலியமூர்த்தி (60) என்பவர் இருசக்கர வாகனத்தில் பாடலூர் சர்வீஸ் ரோடு வழியாக சென்று, தனியார் பைக் ஷோரூம் அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையைக் கடக்கும்போது சென்னையில் இருந்து திருச்சியை நோக்கி வந்த கார் அவர் மீது மோதியுள்ளது. இதில் கலியமூர்த்தி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக திருச்சி போகும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

News December 22, 2025

பெரம்பலூர்: போலீஸ் அடித்தால் எப்படி புகார் அளிப்பது?

image

உங்கள் மீது எந்த தவறும் இல்லாமல் போலீசார் உங்களை அடித்தால், அவர் மீது மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் செயல்படும் Police Complaint Authority-ல் ஆதாரங்களுடன் நீங்கள் புகார் அளிக்கலாம். அதில் பயன் கிடைக்காத பட்சத்தில், <>hrcnet.nic.in என்ற இணையதளம்<<>> மூலமாக மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் உங்களால் புகார் அளிக்க முடியும். இதன் மூலம் கோர்ட், கேஸ் என்ற அலைச்சல் இல்லாமல் உங்களுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.

News December 22, 2025

பெரம்பலூர்: வாகனம் மோதி ஒருவர் பலி

image

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாமுவேல் செல்வராஜ்(85). ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியரான இவர், அவரது மனைவி வசந்தகுமாரியுடன்(77) வேளாங்கண்ணி பேராலயத்திற்கு சென்று விட்டு நேற்று அதிகாலை பெரம்பலூருக்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை 7 மணியளவில் சிறுவாச்சூர் அணுகு சாலையில் சாமுவேல் நடந்து சென்றபோது, அவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

error: Content is protected !!