News April 18, 2025
பெரம்பலூர்: ரேஷன் குறித்து புகார் அளிக்க சிறப்பு எண்

பெரம்பலூர் மாவட்டத்தில் ரேஷன் சம்பந்தமான புகார்களை தெரிவிக்க, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் உதவி மையம் 1800 425 5901 என்ற இலவச தொலைபேசி எண்ணை பயன்படுத்தலாம். மேலும், www.tnpds.gov.in என்ற இணையதளத்திலும் புகாரை பதிவு செய்யலாம். ரேஷன் அரிசி கடத்தல் குறித்து புகார் தெரிவிக்க, 18005995950 என்ற எண்ணை பயன்படுத்தலாம். இந்த தகவலை பிறருக்கு ஷேர் செய்யவும்
Similar News
News November 23, 2025
பெரம்பலூர்: மாணவர்களுக்கு ஆட்சியர் அழைப்பு!

பெரம்பலூர், நம் நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களின் பிறந்த நாளன்று பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நடைபெறவுள்ள பேச்சுப் போட்டி டிசம்பர் 02.12.2025 மற்றும் 03.12.2025 தேதிகளில், பெரம்பலூர் பாரத சாரண, சாரணியர் பயிற்சி மையத்தில் நடைபெற உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.
News November 23, 2025
பெரம்பலூர்: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

பெரம்பலூர் மக்களே.. ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் இலவச பட்டா பெறலாம். இதற்கு ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். இதனை LIKE செய்து SHARE பண்ணுங்க.!
News November 23, 2025
பெரம்பலூர்: எரிவாயு குறைதீர்க்கும் கூட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நாளை (24.11.2025) திங்கள்கிழமை மாலை 4 மணியளவில் கலெக்டர் அலுவலகத்தில் நடைப்பெற உள்ளது. சிலிண்டர்கள் வழங்குவதில் கால தாமதம், நுகர்வோர்கள் பதிவு செய்த குறைகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக இந்த கூட்டம் நடைப்பெறுகிறது. நுகர்வோர்கள் குறைகள் இருப்பின் கூட்டத்தில் தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.


