News June 26, 2024
பெரம்பலூர்: முக்கிய எண்கள் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மற்றும் அதனை பயன்படுத்துவோர் குறித்து தகவல் அறிந்தால் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என கலெக்டர் க.கற்பகம் நேற்று(ஜூன் 25) தெரிவித்துள்ளார். மாநில கட்டுப்பாட்டு அறைக்கான கட்டணமில்லா தொலைபேசி எண் – 10581, ஆட்சியர் – 94441 75000, காவல் துறையினரின் Whatsapp No. 790413 6038 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News December 2, 2025
பெரம்பலூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

பெரம்பலூர் மாவட்டத்தில் (SIR) வாக்காளர் திருத்த பணி கடந்த நவம்பர் 4 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது. இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் வாக்காளர் படிவங்களை பூர்த்தி செய்யாத வாக்காளர்கள் தங்களது படிவங்களை (04-12-2025) அன்றுக்குள் பூர்த்தி செய்து தங்களது வாக்குச்சாவடி அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மிருணாளினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
News December 2, 2025
பெரம்பலூர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

பெரம்பலூர், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மத்திய-மாநில அரசு போட்டித் தேர்வுகளுக்கு வெளியாகி உள்ள அறிவிப்புகளுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில், நாளை முதல் பயிற்சி நடத்தப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும். இப்பயிற்சியில் கலந்து கொள்ளுமாறு கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.
News December 2, 2025
பெரம்பலூர்: ரோந்து காவலர்கள் விவரம்!

பெரம்பலூர் மாவட்டத்தில், அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் இரவு நேரங்களில் பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதனைத் தொடர்ந்து (01.12.2025) இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளார்கள். ஏதேனும் புகார் தெரிவிக்க கொடுக்கப்பட்டுள்ள என்னை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


