News March 26, 2025
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோடைகாலத்தில் பொதுமக்கள் வெயிலிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள பொது சுகாதாரம் (ம) நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றிட வேண்டும் கோடை வெயிலினால் அதிக வியர்வை வெளியேறும் பொழுது உடலில் நீர் சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. பொதுமக்கள் அதிக அளவில் மோர், இளநீர், உப்பு கலந்த எலுமிச்சை சாறு, ORS கரைசல் ஆகியவற்றை பருக வேண்டும் என கலெக்டர் தகவல்.
Similar News
News November 27, 2025
பெரம்பலூர்: அரசு ஊழியர் லஞ்சம் கேட்டால் உடனே CALL!

சான்றிதழ்கள் வழங்குவது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா, சிட்டா, அடங்கல் சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை வட்டாட்சியரின் (தாசில்தார்) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் தாசில்தாரோ அல்லது அலுவலக ஊழியர் யாரவது உங்களிடம் லஞ்சம் கேட்டால், பெரம்பலூர் மாவட்ட மக்கள் 04328-296407 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News November 27, 2025
பெரம்பலூர்: புதிய பால் குளிரூட்டும் நிலையம் திறப்பு

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் ஊராட்சியில், ரூ.66 லட்சம் மதிப்பீட்டில் 15000 லிட்டர் கொள்ளளவுடன் அமைக்கப்பட்டுள்ள பால் குளிரூட்டும் மையத்தினை திறந்து வைத்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர், அரசு அலுவலர்கள், திமுக மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
News November 27, 2025
பெரம்பலூர்: மின்வாரிய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் மாவட்டம், நான்கு ரோடு அருகே உள்ள செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு
மின்சாார சட்ட மசோதாவை திரும்பப்பெறுக, உள்ளிட்ட நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகளை திரும்ப பெறுக, உத்திரப்பிரதேச மின்வாரியத்தை தனியார்மயம் செய்யாதே என பல கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கத்தினர் இன்று காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


