News August 8, 2024
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டம் சார்ந்த குறைபாடுகளைக் களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும், சிறப்புப் பொது விநியோகத் திட்ட குறை தீர்க்கும் முகாம், அம்மாபாளையம், எறையூர், பெருமத்தூர், கூத்தூர் ஆகிய கிராமத்தில் 10.08.2024 நடைபெற உள்ளது.
என ஆட்சியர் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 5, 2025
பெரம்பலூர்: BE போதும் அரசு வேலை ரெடி!

இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் (HCL) காலியாக உள்ள Junior Manager பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 64
3. வயது: 18-40 (SC/ST-45,OBC-43)
4. மாதச்சம்பளம்: ரூ.30,000 – ரூ.1,20,000
5. கல்வித் தகுதி: Diploma, Degree, B.E/B.Tech, LLB
6.கடைசி தேதி: 17.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க
News December 5, 2025
பெரம்பலூர் மாவட்டத்தில் நிரம்பி வழியும் ஏரிகள்

பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 70-க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தின் பச்சை மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, பெரம்பலூர் அருகே அமைந்துள்ள குரும்பலூர் ஏரி முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. இதுபோல மாவட்டத்தில் அமைந்துள்ள விசுவக்குடி, கொட்டரை, மருதையாறு உள்ளிட்ட 7 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன.
News December 5, 2025
பெரம்பலூரில் வருவாய்துறை சங்கம் மறியல் போராட்டம்

பெரம்பலூர் மாவட்ட வருவாய்த்துறை சங்கம் சார்பில், நேற்று (டிச.04) மாவட்ட ஆட்சியர் நுழைவு வாயில் மற்றும் பாலக்கரை ரவுண்டான அருகில் தேர்தல் வாக்குறுதியில் கூறிய, 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மறியல் செய்து ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இந்த ஆர்பாட்டத்தில், வருவாய்துறை சங்க தலைவர் பாரதிவளவன், செயலாளர் சரவணன் மற்றும் மாவட்டப் பொருளாளர் குமரிஆனந்தன் ஆகியோர் தலைமையில் நடைப்பெற்றது.


