News August 8, 2024
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் இனத்தை சார்ந்தவர்கள் HCL நிறுவனத்தில் வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு (B.Sc Computing Designing), (B.Com, BCA & BBA) படித்திட விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04328 – 276317 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது பெரம்பலூர், தாட்கோ, மாவட்ட மேலாளர் அலுவலகத்தையோ அணுகி உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என ஆட்சியர் அறிவிப்பு.
Similar News
News December 9, 2025
பெரம்பலுர்: பள்ளி மாணவனுக்கு குவியும் பாராட்டு

வேலூர் VIT பல்கலைக் கழகம் நடத்திய மாநில அளவிலான திருக்குறள் போட்டியில், வெற்றி பெற்ற Top 10 மாணவர்களுக்கு பரிசளிப்பு விழாவில், வாலிகண்டபுரம் அ. மே நி.பள்ளி மாணவன் யுவன் ஸ்ரீக்கு, VIT வேந்தர் விசுவநாதன் சான்றிதழ் மற்றும் ரூ.7000 ரொக்கப் பரிசும் பெறுகிறார். அம்மாணவனை நேற்று (08.12.2025) பள்ளித் தலைமை ஆசிரியர் செல்வராசு மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டினர்.
News December 9, 2025
பெரம்பலூர்: பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர் மாவட்டத்தில் “சமூக நீதிக்கான தந்தை பெரியார்” விருது பெற தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ந.மிருணாளினி தெரிவித்துள்ளார். இந்த விருதுக்கு விண்ணப்பிப்பவர்கள் தங்களது விண்ணப்பத்தை, உரிய ஆவணங்களுடன் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நல அலுவலகத்திற்கு 18.12.2025-க்குள் அனுப்பி வைக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News December 9, 2025
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பிரிவைச் சார்ந்த மாணவர்கள், பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி தெரிவித்துள்ளார். வருகிற டிச.31ம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04328-296565 என்ற எண்ணை அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


