News November 25, 2024
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் வெங்காயத்தில் திருகல் நோய் தாக்கத்தினை கட்டுப்படுத்த புரோ பிகோனசோல் 25 EC (அ) ஹெக்ச கோனசோல் 5EC இவற்றுள் ஏதேனும் ஒரு பூஞ்சான கொள்ளையை ஏக்கருக்கு 200 மி. லி.வீதம் இழை வழியாக தெளிக்கலாம் என தோட்டக்கலைத்துறையின் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ள வழிமுறைகளை விவசாயிகள் பின்பற்றி பயன் பெற வேண்டும். மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 17, 2025
பெரம்பலூர் தமிழ்நாட்டில் முதலிடம்

பெரம்பலூர் மாவட்டத்தில், மொத்தம் 5,90,490 வாக்காளர்களுக்கு இதுவரை கணக்கிட்டு படிவம் வழங்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் முதல் மாவட்டமாக 5,87,192 (99.44%) 1,21,773 (20.62%) வாக்காளர்களிடம் இருந்து பூர்த்தி செய்த கணக்கெடுப்பு படிவங்கள் திரும்பப் பெறப்பட்டு, தேர்தல் ஆணையத்தின் பிரத்தியேக செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
News November 16, 2025
பெரம்பலூரில் ஆசிரியர் தகுதித் தேர்வு ஆட்சியர் ஆய்வு

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி, இன்று ஆசிரியர் தகுதித் தேர்வு – தாள். 2, நடைபெற்றதைப் பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பார்வையிட்டார். அவருடன் பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன் அவர்களும் உடன் இருந்தார். பல்வேறு மையங்களில் நடைபெற்ற தேர்வுகளை மாவட்டக்கல்வி அலுவலர்கள் செல்வக்குமார், இலதா கெளசர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
News November 16, 2025
பெரம்பலூரில் வாக்காளர்களுக்கு S.I.R படிவங்கள்

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், குன்னம் சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணியில், இதுவரை 5,81,620 வாக்காளர்களுக்கு, கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டு உள்ளது. மேலும், 49,972 விண்ணப்ப படிவங்கள் திரும்ப பெறப்பட்டு, பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட தேர்தல் அலுவலர், ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.


