News August 2, 2024
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள், நவீன முறை சலவையகம் அமைக்க தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க 10 நபர்கள் கொண்ட ஒரு குழுவாக செயல்பட வேண்டும். இத்திட்டம் மூலம் பயன்பெற விரும்புபவர்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News November 28, 2025
பெரம்பலூர்: புயல் அவசர உதவி எண்கள்!

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘திட்வா’ புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், பெரம்பலூர் உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கன மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் உங்கள் பகுதியில் மழை / புயலால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை மையம் 1070, மாவட்ட பேரிடர் மேலாண்மை மையம் 1077 அழைத்தால் போதும், உடனடியாக உதவி அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க!
News November 28, 2025
பெரம்பலூர் கலெக்டர் அறிவிப்பு!

பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு வகுப்பு வருகின்ற டிசம்பர்-03ந் தேதி முதல் நடத்தப்பட உள்ளது. எனவே போட்டித் தேர்வு எழுத ஆர்வமுள்ளவர்கள் வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் மிருணாளினி விடுத்துள்ள செய்தி.
News November 28, 2025
பெரம்பலூர்: ஓட்டல் ஊழியர் மீது தாக்குதல்

வடக்குமாதவி சாலையை சேர்ந்தவர் சுகுமார் (45). இவர் பெரம்பலூர் தனியார் ஓட்டலில் ஊழியராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு சுகுமார் மது போதையில் அந்த ஓட்டலுக்கு சென்றார். அப்போது அங்கு பணியில் இருந்த மேலாளர் மகேந்திர பிரகாஷிடம் தகராறில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் சுகுமார் பலத்தகாயமடைந்தார். இச்சம்பவம் குறித்து அறிந்த போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


