News June 25, 2024
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மற்றும் அதனை பயன்படுத்துவோர் குறித்து தகவல் அறிந்தால் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என இன்று (ஜூன்-25) கலெக்டர் க.கற்பகம் தெரிவித்தார். மாநில கட்டுப்பாட்டு அறைக்கான கட்டணமில்லா தொலைபேசி எண் 10581, மாவட்ட ஆட்சியர் தொடர்பு எண் 94441-75000 என்ற எண்ணிற்கோ, காவல் துறையினரின் Whatsapp No. 790413-6038 என்ற எண்ணை அழைக்கலாம்.
Similar News
News December 14, 2025
பெரம்பலூரில் வாகனங்கள் பொது ஏலம்!

பெரம்பலூர் மாவட்டத்தில், கஞ்சா வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 2 நான்கு சக்கர, 1 மூன்று சக்கர மற்றும் 12 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 15 வாகனங்கள் நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா தலைமையில், ஏலம் விடப்பட்டது. மேலும் இந்த பொது ஏலத்தில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மட்டுமின்றி மற்ற மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு ஆர்வத்துடன் ஏலம் கேட்டனர்.
News December 14, 2025
பெரம்பலூர்: தேசிய நீதிமன்றத்தில் 563 வழக்குகள் தீர்வு

பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றங்களில், தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுக்களின் சார்பில் நடைபெற்ற இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தை, மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான பத்மநாபன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மேலும் இதில் மொத்தம் 563 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
News December 14, 2025
பெரம்பலூர்: நேரில் உடல்நலத்தை விசாரித்த MP ஆ. ராசா

பெரம்பலூரில் (13.12.2025) வேப்பூர் கிராமம் பீல்வாடியில், கழக துணை பொதுச் செயலாளர் ஆ. இராசா, விபத்தில் காயமடைந்த மாவட்ட பொதுக் குழு உறுப்பினர் பீல்வாடி கே. ராமச்சந்திரன் உடல்நலத்தை விசாரித்தார். அவருடன் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ப. துரைசாமி, வழக்கறிஞர் என். ராஜேந்திரன், டி.சி. பாஸ்கர், மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.


