News August 17, 2024

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனை தொடந்து, இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 14, 2025

பெரம்பலூர்: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

image

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். இதனை ஷேர் பண்ணுங்க!

News November 14, 2025

பெரம்பலூர்: வரலாற்று சிறப்பு மிக்க இடம் பற்றி தெரியுமா?

image

பெரம்பலூர் மாவட்டம் சாத்தனூர் கிராமத்தில் புகழ்பெற்ற தேசிய கல்மரப் பூங்கா உள்ளது. இங்கு சுமார் 120 மில்லியன் ஆண்டுகள் பழமையான மரம் ஒன்று கல்லாக மாறியிருக்கிறது. 1940ம் ஆண்டு தஞ்சாவூரில் இருந்து வந்த, இந்தியப் புவியியல் ஆய்வு மையத்தின், புகழ்பெற்ற புவியியலாளரான டாக்டர் எம்.எஸ். கிருஷ்ணனால் இது கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அனைவரும் தெரிந்து கொள்ள இதை உடனே ஷேர் பண்ணுங்க!

News November 14, 2025

பெரம்பலூர்: தொழில்நுட்பப் பணிகளுக்கான போட்டித் தேர்வு

image

பெரம்பலூர் மாவட்டத்தில், ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான கணினி வழிப் போட்டித் தேர்வு, வருகிற நவ.16ம் தேதி நடைபெறும் என்று ஆட்சியர் ந.மிருணாளினி தெரிவித்துள்ளார். இந்தத் தேர்வானது, ரோவர் பொறியியல் கல்லூரி, சிறுவாச்சூரில் உள்ள ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி ஆகிய மையங்களில் நடைபெறும் என்றும் தேர்வு எழுதவிருப்போர், தேர்வுக்கான அறிவுறுத்தல்களைக் கவனமாகப் பின்பற்றுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!