News April 11, 2025
பெரம்பலூர் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை

வங்கக்கடல் காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று (ஏப்.11) பல்வேறு பகுதியில் அடுத்த 3 மணிநேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பெரம்பலூர் மக்களே வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்க. இந்த தகவலை உங்க உறவினர்களுக்கும் SHARE பண்ணுங்க…
Similar News
News December 22, 2025
பெரம்பலூர்: போலீஸ் அடித்தால் எப்படி புகார் அளிப்பது?

உங்கள் மீது எந்த தவறும் இல்லாமல் போலீசார் உங்களை அடித்தால், அவர் மீது மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் செயல்படும் Police Complaint Authority-ல் ஆதாரங்களுடன் நீங்கள் புகார் அளிக்கலாம். அதில் பயன் கிடைக்காத பட்சத்தில், <
News December 22, 2025
பெரம்பலூர்: வாகனம் மோதி ஒருவர் பலி

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாமுவேல் செல்வராஜ்(85). ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியரான இவர், அவரது மனைவி வசந்தகுமாரியுடன்(77) வேளாங்கண்ணி பேராலயத்திற்கு சென்று விட்டு நேற்று அதிகாலை பெரம்பலூருக்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை 7 மணியளவில் சிறுவாச்சூர் அணுகு சாலையில் சாமுவேல் நடந்து சென்றபோது, அவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
News December 22, 2025
பெரம்பலூர்: விபத்தில் பெண் ஒருவர் பலி

வேப்பந்தட்டை தாலுகா, மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மோகனின் மனைவி செல்லம்மாள் (55). இவர் ரஞ்சன்குடி கிராமத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு செல்லும் வழியில், மங்கலம் தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து சென்றபோது, அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியுள்ளது. இதில் செல்லம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடலை மீட்டு விசாரணை செய்து வருகின்றனர்.


