News May 16, 2024
பெரம்பலூர் மழைக்கு வாய்ப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று (மே.16) நண்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது.
Similar News
News December 15, 2025
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், தமிழக அரசின் 2026-ம் ஆண்டிற்கான கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இவ்விருதிற்கான விண்ணப்பங்களை awards.tn.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே பதிவு செய்திட வேண்டும். மேலும் பதிவு செய்வதற்கான கடைசி தேதி (டிச.15) எனவும், தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News December 15, 2025
பெரம்பலுர் மாவட்டத்தில் மின் தடை அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிறுவாச்சூர், எசனை, கிருஷ்ணாபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி சிறுவாச்சூர், அயிலூர், விளாமுத்தூர், கவுல்பாளையம், தீரன் நகர், நொச்சியம்,விஜயகோபா லபுரம், செல்லியம்பாளையம், செட்டிகுளம், நாரணமங்கலம், அயிலூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்சாரம் இருக்காது.
News December 14, 2025
குன்னம்: முப்பெரும் விழாவில் பங்கேற்ற அமைச்சர்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதி லப்பைகுடிகாடு பேரூராட்சி கிழக்கு ஜமாளி நகரில், லப்பைகுடிகாடு கிழக்கு ஜும்ஆ பள்ளிவாசல் நடத்தும் முப்பெரும் விழா, மஸ்ஜித் குபா (பள்ளிவாசல்) திறப்பு விழா, ஷரீஅத் விளக்க விழா, நிஸ்வான் பட்டமளிப்பு விழா ஆகிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர். இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


