News May 17, 2024
பெரம்பலூர்: மழைக்கு வாய்ப்பு!

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று (மே.17) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் பெரம்பலூரில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது. இன்று காலை முதலே தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 27, 2025
பெரம்பலூர்: புதுமாப்பிள்ளை விபரீத முடிவு!

நெற்குணத்தைச் சேர்ந்தவர் மனோஜ் ( 27). இவருக்கு கோவையில் பணியாற்றி வரும் ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இன்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் புதுமாப்பிள்ளை மனோஜ் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டு மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து உறவினர்களால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
News November 27, 2025
பெரம்பலூர் மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வெண்மணி, கூத்தூர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் இங்கிருந்து மின்சாரம் பெரும் பகுதிகளில் நாலை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்வினியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர்கள் கார்த்திகேயன் (குன்னம்), செல்லப்பாங்கி (கூத்தூர்) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
News November 27, 2025
பெரம்பலூர் ரோந்து பணி காவலர்கள் விவரம்

பெரம்பலூர் மாவட்டத்தில், அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் இரவு நேரங்களில் பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதனைத் தொடர்ந்து இன்று (25.11.2025) இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளார்கள். ஏதேனும் புகார் தெரிவிக்க கொடுக்கப்பட்டுள்ள என்னை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


