News April 26, 2025
பெரம்பலூர் மக்களே ராகு – கேது பெயர்ச்சிக்கு இங்க போங்க!

பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் உள்ள சிவாலாயத்தில் 18 மாதத்திற்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் ராகு பகவான் இன்று மாலை 4.20 மணிக்கு மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார். இத்தலத்தில் வழிபட்டால் ராகு தோஷம் நிவர்த்தி அடையும். இதை உறவினர், நண்பர்களுக்கு SHARE செய்யுங்க!
Similar News
News April 27, 2025
பெரம்பலூர் வேளாண் மையத்தில் வேலை வாய்ப்பு

பெரம்பலூரில் உள்ள் மத்திய வேளாண் மையத்தில் ஓட்டுநர் மற்றும் ஸ்டெனோகிராபர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10 மற்றும் 12 படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.21,700 முதல் ரூ.81000வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க ICAR – KRISHI VIGYAN KENDRA மையத்தை நேரில் தொடர்பு கொள்ளவும். வேலை தேடும் நபருக்கு ஷேர் செய்யவும்
News April 27, 2025
பெரம்பலூர்: மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் கிராமத்தில் ஜெயராஜ் என்பவர் நேற்று இரவு 9 மணியளவில் தெற்கு இருங்களூர் கோவில் திருவிழாவில் சீரியல் லைட் சரிசெய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஜெயராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
News April 27, 2025
பெரம்பலூர்: கிணற்றில் விழுந்து 10ஆம் வகுப்பு மாணவன் பலி

பெரம்பலூர் அடுத்த வெண்பாவூர் கிராமத்தை சேர்ந்தவர் குருசாமி. அவரது மகன் கவுதம்(15) அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். கோடை விடுமுறையில் இருந்த இவர் நேற்று மாலை அதே பகுதியில் உள்ள வயலில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கால் தவறி வயலில் இருந்த கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரின் உடலை மீட்ட கை.களத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.