News October 10, 2025
பெரம்பலூர்: பட்டாசுக் கடை வைக்க வாய்ப்பு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் சில்லறை பட்டாசு விற்பனையாளர்கள் தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். தங்களின் சுய ஆதாரங்களைக் கொண்டு ரூ.600 அரசு கட்டணத்தைச் செலுத்தி இன்றைக்குள்ளாக (10.10.2025) இ-சேவை மையம் அல்லது https://www.tnesevai.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார். SHARE IT NOW
Similar News
News December 8, 2025
பெரம்பலூர்: மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் பெரம்பலூர் நகரைச் சேர்ந்த மணிகண்டன் (30), ரஞ்சன்குடி ராதாகிருஷ்ணன் (22) ஆகியோர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளனர். அப்பொழுது வீட்டின் அருகே உள்ள மின் கம்பி உரசியதில் இருவரும் கடும் பாதிப்படைந்தனர். இருவரையும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பொழுது மணிகண்டன் செல்லும் வழியிலே உயிரிழந்தார். இது குறித்து மங்களமேடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 8, 2025
பெரம்பலூர்: ஆட்சியர் அலுவலகத்தில் நிதி திரட்டும் நிகழ்ச்சி

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் படைவீரர் கொடி நாளினை முன்னிட்டு, கொடி நாள் நிதி திரட்டும் நிகழ்வை (07.12.2025) தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி, நம் நாட்டிற்காக பாடுபடும் வீரர்களின் நலனுக்காக, அனைவரும் தங்களால் இயன்ற அளவு நிதி வழங்க வேண்டுகிறோம் என்று நிதி உதவி கோரிக்கை வைத்தார்.