News August 16, 2024
பெரம்பலூர்: நண்பரின் கடைக்கு தீ வைத்த நபர்

கல்லை கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் டூவீலர் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை அந்த கடை தீ பற்றி எரிந்தது. இதில், கடையில் உள்ள பொருட்கள் தீயில் கருகின. வெங்கடேஷ் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் வல்லரசு (30) ,அவரது நண்பரான தமிழ்செல்வன் ஆகியோர் கடையில் தீ வைத்தது தெரியவந்தது. தமிழ்செல்வனை கைது செய்த போலீசார் வல்லரசுவை தேடி வருகின்றனர்.
Similar News
News December 18, 2025
பெரம்பலூரில் கரும்பு அரவை தொடக்கம்

பெரம்பலூர் சர்க்கரை ஆலையின் 2025-2026 ஆம் ஆண்டிற்கான கரும்பு அரவைப் பருவம் இன்று (18.12.2025) முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது. இப்பணிகளைத் தொடங்கி வழங்கிய மாவட்ட ஆட்சியர் மிருணாளினி, விவசாயிகளின் நலன் காக்க ஆலையின் செயல்பாடு சிறப்பாக அமைய வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் ஆலை அதிகாரிகள் மற்றும் கரும்பு விவசாயிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.
News December 18, 2025
பெரம்பலூர்: வாக்காளர்களே உடனே செக் பண்ணுங்க!

பெரம்பலூர் மக்களே, உங்கள் VOTER ID பழசாவும், சேதமடைந்தும் காணப்படுகிறதா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாற்ற இதை பண்ணுங்க..
1. <
2. உங்க VOTER ID (EPIC) எண் மற்றும் மாநிலத்தை பதிவிடுங்க. உங்க போனுக்கே VOTER ID வந்துடும்.
3. இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை.
இதனை மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க…
News December 18, 2025
பெரம்பலூர்: ஆட்சியரக கூட்டரங்கில் ஆய்வுக் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் சார்பில், மாவட்ட அளவிலான அனைத்து துறை அலுவலர்களுடனான வருடாந்திர ஆய்வுக்கூட்டம் இன்று (டிச.17) நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.


