News March 21, 2024
பெரம்பலூர் தொகுதியின் புதிய திமுக வேட்பாளர்

2019ஆம் ஆண்டு தேர்தலில் பெரம்பலூர் தொகுதி இந்திய ஜனநாயகக் கட்சிக்கு அளிக்கப்பட்டது. அந்த கட்சி இந்த முறை பாஜக-வுடன் கூட்டணி வைத்த நிலையில், இந்தத் தொகுதியில் தற்போது திமுக-வே போட்டியிடுகிறது. இதன் வேட்பாளராக அருண் நேரு அறிவிக்கப்பட்டிருக்கிறார். இவர் அமைச்சர் கே.என்.நேருவின் மகன். லால்குடி, மணச்சநல்லூர், முசிறி, துறையூர், சட்டமன்றத் தொகுதிகள், பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்குள் அடங்கும்.
Similar News
News March 12, 2026
திருச்சி: உங்களை தேடி வரும் பெட்ரோல்!

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ‘<
News March 12, 2026
திருச்சி: தமிழ் தேர்வில் 474 பேர் ஆப்சென்ட்

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. திருச்சி மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழ் மொழி தேர்வு எழுத தனித் தேர்வர்கள் உட்பட 34,501 மாணவ, மாணவிகள் பதிவு செய்திருந்தனர். இதில் 34,027 மாணவ, மாணவிகள் மட்டுமே கலந்து கொண்டு தேர்வு எழுதினர். 474 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News March 12, 2026
திருச்சி: அதிரடி தீர்ப்பு – 20 ஆண்டுகள் கடுங்காவல்

திருச்சியை சேர்ந்தவர் முருகேசன். இவர் ஸ்ரீரங்கம் பகுதியில் வசிக்கும் 8ஆம் வகுப்பு படித்துக் கொண்டிந்த சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, குழந்தை திருமணம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். இவ்வழக்கின் விசாரணை நேற்று திருச்சி நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில் முருகேசனுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.50,000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.


