News March 21, 2024
பெரம்பலூர் தொகுதியின் புதிய திமுக வேட்பாளர்

2019ஆம் ஆண்டு தேர்தலில் இத்தொகுதி இந்திய ஜனநாயகக் கட்சிக்கு அளிக்கப்பட்டது. அந்த கட்சி இந்த முறை பாஜக-வுடன் கூட்டணி வைத்த நிலையில், இந்தத் தொகுதியில் தற்போது திமுக-வே போட்டியிடுகிறது. இதன் வேட்பாளராக அருண் நேரு அறிவிக்கப்பட்டிருக்கிறார். இவர் அமைச்சர் கே.என். நேருவின் மகன். கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே இவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 14, 2025
பெரம்பலூர் பெயர் காரணம் தெரியுமா?

முற்காலத்தில் பெரும்புலியூர் என்று அழைக்கப்பட்டு வந்த இந்நகரம் காலப்போக்கில் மருவி, தற்போது பெரம்பலூர் என அழைக்கப்படுகிறது. இதுபோல இப்பகுதியில் பிரம்பு மரங்கள் அதிகமாக விளைந்த காரணத்தால் அதிலிருந்து பல சாதனங்கள் இவ்வூர் மக்கள் தயாரித்து வந்த நிலையில், ”பிரம்பலூர்” என்றும், அது காலப்போக்கில் பெரம்பலூர் என மாறியதாகவும் கூறப்படுகிறது.
News December 14, 2025
பெரம்பலூர்: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!
News December 14, 2025
பெரம்பலூர்: மாணவர்களுக்கு ரூ.12000 உதவி தொகை

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு மாணவர்கள், பிளஸ் 2 வரை படிக்க உதவி தொகை பெற, தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவி திட்ட தேர்வுகள் நடத்தி, தேர்வு செய்ய உள்ளனர். விண்ணப்பங்களை டிச,15-க்குள் www.dge.tn.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, கட்டண தொகை ரூ.50 அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் டிச.20-க்குள் ஒப்படைக்க அரசு தேர்வு குழு இயக்குனரகம் தெரிவித்துள்ளது.


