News April 28, 2025
பெரம்பலூர்: திருமண வரமளிக்கும் பஞ்சநதீஸ்வரர்

பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூரில் பஞ்சநதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பஞ்சபூதங்களை விளக்கும் வகையில் நீர், நிலம், ஆகாயம், காற்று, நெருப்பு ஆகிய பஞ்சலிங்க சிலைகள் உள்ளன. மேலும் நீண்ட நாள் திருமணம் ஆகாதவர்கள் இக்கோவிலில் சிவன்-அம்பாள் திருக்கல்யாணத்தில் பங்கேற்று வழிபட்டால் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு சேர் செய்யவும்.
Similar News
News November 23, 2025
பெரம்பலூர்: எரிவாயு குறைதீர்க்கும் கூட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நாளை (24.11.2025) திங்கள்கிழமை மாலை 4 மணியளவில் கலெக்டர் அலுவலகத்தில் நடைப்பெற உள்ளது. சிலிண்டர்கள் வழங்குவதில் கால தாமதம், நுகர்வோர்கள் பதிவு செய்த குறைகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக இந்த கூட்டம் நடைப்பெறுகிறது. நுகர்வோர்கள் குறைகள் இருப்பின் கூட்டத்தில் தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.
News November 23, 2025
பெரம்பலுர்: 10th போதும் அரசு வேலை!

எல்லை சாலைகள் அமைப்பில் காலியாக உள்ள Vehicle Mechanic, MSW(Painter), MSW(Driver Engine Static)542 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th, ITI
3. கடைசி தேதி : 24.11.2025
4. சம்பளம்: ரூ.20200 வரை
5. இதற்கு <
இத்தகவலை அனைவருக்கும் SHAREபண்ணி தெரியப்படுத்துங்க.
News November 23, 2025
பெரம்பலூர்: சிறப்பு கல்விக் கடன் முகாம் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் சிறப்பு கல்விக் கடன் முகாம், வரும் நவம்பர் 27-ம் தேதி அன்று நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இம்முகாமில், இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவிகள் தேவையான ஆவணங்களுடன் கலந்துகொண்டு கல்விக்கடன் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


