News March 19, 2024

பெரம்பலூர்: ஜக்கம்மா சொல்ற.நல்ல காலம் பொறக்குது

image

பெரம்பலூர் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை பெரம்பலூர் துறை மங்கலம் பகுதியில் பெரம்பலூர் நகர செயலாளரும், எம்.எல்.ஏவுமான பிரபாகரன் தலைமையில் திமுக சார்பில் தலைமை கழக பேச்சாளர் கோவிந்தன் குடுகுடுப்பைக்காரர் வேடமணிந்து நல்ல காலம் பொறக்கிறது ஜக்கம்மா சொல்கிறார் திமுகவிற்கு வாக்களியுங்கள் என வாக்கு சேகரித்தனர்.

Similar News

News November 7, 2025

பெரம்பலூர்: மேம்பாலம் அருகே கிடந்த சடலம்

image

பெரம்ப–லூர் துறைமங்கலம் மேம்பாலம் அருகே நேற்று காலை 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் பெரம்பலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் உடலை கைப்பற்றி இறந்த முதியவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்?, எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 7, 2025

பெரம்பலூர் மக்கள் கவனத்திற்கு…

image

பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மின்வாரிய கோட்ட மின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் வரும் நவ.11 அன்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கைகள், குறைகளை நேரில் முறையிட்டு பயன்பெறலாம் என செயற்பொறியாளர் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

News November 7, 2025

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில், அய்யலூர், வெண்பாவூர், பெரியவெண்மணி, சிறுகன்பூர் ஆகிய கிராமங்களில் (8.11.2025) சனிக்கிழமை அன்று காலை 10 மணி அளவில் உணவுப் பொருள் வழங்கல் சம்பந்தமான குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டைகள் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயனடையுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!