News April 25, 2025
பெரம்பலூர்: செம்மொழி நாள் போட்டிகள் ஆட்சியர் அறிவிப்பு

11,12 வகுப்பு மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான செம்மொழி நாள் கட்டுரை, பேச்சுப்போட்டி மே 9,10 தேதியில் நடைபெறுகிறது,போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவர்கள் விண்ணப்பப் படிவத்தை https://tamilvalarchithurai.in.gov.inபதிவிறக்கம் செய்து பள்ளி மாணவர்கள் தலைமையாசிரியரிடமும், கல்லூரி மாணவர்கள் முதல்வரிடமும் பரிந்துரைக்கடிதத்துடனும் 05.05.2025 நாளுக்குள் நேரில் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
Similar News
News April 26, 2025
பெரம்பலூர்: போர்கண்ட ரஞ்சன்குடி கோட்டை

பெரம்பலூரில் ரஞ்சன்குடி கோட்டை என்று அழைக்கப்படும் நஞ்சன்கொடி கோட்டை அமைந்துள்ளது. இக்கோட்டை கி.பி 14ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது. பின்னர் 1751ல் பிரிட்டிஸ் மற்றும் பிரஞ்ச் படைகளுக்கு இடையே நடைபெற்ற வாலிகொண்டா போரின் முக்கிய காட்சியாக உள்ளது. கோட்டையானது சுரங்கப்பாதை, சிறைச்சாலை, பீரங்கிமேடை மூன்றடுக்கு பாதுகாப்பு என பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. SHARE IT.
News April 26, 2025
பெரம்பலூர்: 3935 அரசு பணியிடங்களுக்கான அறிவிப்பு

இளநிலை உதவியாளர், விஏஓ உள்ளிட்ட பணியிடங்களுக்காக நடத்தப்படும் TNPSC குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் ஜூலை 12 ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 3935 பணியிடங்கள் நிரப்பப்படும் என TNPSC தெரிவித்துள்ளது. மே 24 ஆம் தேதிக்குள் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை உங்க நண்பர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க..
News April 26, 2025
பெரம்பலூர் மக்களே ராகு – கேது பெயர்ச்சிக்கு இங்க போங்க!

பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் உள்ள சிவாலாயத்தில் 18 மாதத்திற்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் ராகு பகவான் இன்று மாலை 4.20 மணிக்கு மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார். இத்தலத்தில் வழிபட்டால் ராகு தோஷம் நிவர்த்தி அடையும். இதை உறவினர், நண்பர்களுக்கு SHARE செய்யுங்க!