News April 27, 2025
பெரம்பலூர்: கிணற்றில் விழுந்து 10ஆம் வகுப்பு மாணவன் பலி

பெரம்பலூர் அடுத்த வெண்பாவூர் கிராமத்தை சேர்ந்தவர் குருசாமி. அவரது மகன் கவுதம்(15) அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். கோடை விடுமுறையில் இருந்த இவர் நேற்று மாலை அதே பகுதியில் உள்ள வயலில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கால் தவறி வயலில் இருந்த கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரின் உடலை மீட்ட கை.களத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News December 4, 2025
பெரம்பலூர்: வீட்டு வரி பெயர் மாற்ற வேண்டுமா?

பெரம்பலூர் மக்களே, உங்க வீட்டு வரி பெயர் மாற்றத்திற்கு அலைச்சல் வேண்டாம். அதற்கு எளிய வழி இருக்கு! உங்க அலைச்சலை போக்க இங்கு <
News December 4, 2025
பெரம்பலூர்: மேலாண்மைக் குழு ஆசிரியர்களுக்குப் பயிற்சி

பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளி மேலாண்மைக்குழு ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி நேற்று வள்ளுவர் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வினை முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன் தொடங்கி வைத்தார், நேர்முக உதவியாளர் ரமேஷ் முன்னிலையில், முனைவர் மாயக்கிருஷ்ணன் ஒருங்கிணைப்பு செய்தார். இதில் ஜெயராமன், வேல்முருகன், செல்வராஜ் ஆகியோர் ஆசிரியர்களுக்கு பயிற்சியளித்தனர்.
News December 4, 2025
பெரம்பலூர் கலெக்டர் யார் தெரியுமா?

ந.மிருணாளினி 2001ல் கூட்டுறவுத் துறையில் துணைப்பதிவாளராக பணி நியமனம் பெற்றார். பின்னர் இணைப் பதிவாளராக புதுகை, திருச்சி, கடலூா் ஆகிய மாவட்டங்களிலும், சென்னையில் கூடுதல் பதிவாளராகவும் பணிபுரிந்தார். கடந்த 2023-ல் இந்திய ஆட்சிப் பணிக்கு பதவி உயா்வு பெற்ற இவர், ஸ்ரீபெரும்புதூா் சாா்-ஆட்சியராக பதவி வகித்து, தற்போது பெரம்பலூா் மாவட்டத்தின் கலெக்டராக பொறுப்பேற்றுள்ளாா். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க


