News August 7, 2024
பெரம்பலூர் எம்பி கருணாநிதிக்கு மரியாதை

டெல்லி அண்ணா கலைஞர் அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 6ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் எம்பி அருண் நேரு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், கழக கொள்கை பரப்பு செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருணாநிதியின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
Similar News
News September 17, 2025
அரியலூர்: பதற்றமான பகுதிகளுக்கு குழு அமைப்பு

அரியலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்படும் 29 பதற்றமான பகுதிகளை கண்காணித்திட துணை கலெக்டர் தலைமையில் 5 மண்டல கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தகவல். மேலும், மீட்பு உபகரணங்கள் ஜெனரேட்டர் உள்ளிட்ட உபகரணங்களை தயார் நிலையில் வைக்கவும். அனைத்து நீர்நிலைகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரவும் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்
News September 17, 2025
அரியலூர்: ரோந்து பணி செல்லும் காவலர்கள் விவரம்

அரியலூர் மாவட்டத்தில் ரோந்து பணி செல்லும் காவலர்கள் விவரம், அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை குறைக்கும் வகையில், அரியலூர் மாவட்டம் முழுவதும் தினம்தோறும் அரியலூர் மாவட்ட காவல் துறையினர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குவாகம் காவல் நிலையம் தொடர்பு எண், செல்லக்கூடிய காவலர்களின் தொடர்பு எண் மாவட்ட காவல்துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
News September 16, 2025
அரியலூர்: சொந்த தொழில் தொடங்க கடன் உதவி!

அரியலூரில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சொந்தமாக தொழில் தொடங்க தமிழகத்தில் UYEGP என்ற சூப்பரான திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதன் மூலம் சொந்தமாக தொழில் தொடங்க ரூ.5,00,000-ரூ.15,00,000 வரை 25% மானியத்தில் கடன் வழங்கப்படுகிறது. இதற்கு 8th தேர்ச்சி பெற்று, 18 வயது பூர்த்தியடைந்தால் போதும், இங்கு <