News May 16, 2024
பெரம்பலூர்: இன்று முதல் விண்ணப்பிக்க அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மற்றும் தேர்வுக்கு வருகை புரியாத மாணவர்களுக்கு துணை தேர்வு வரும் 2024 ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெறும் தேர்விற்கு (மே.16) இன்று முதல் ஜூலை 1 வரை காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்ட கல்வி வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 26, 2025
பெரம்பலூர்: புதிய திட்டங்களை தொடங்கி வைக்கும் அமைச்சர்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பேருந்து நிலையத்தில் புதிய பேருந்து சேவைகளை தொடக்கி வைப்பதற்காகவும், பால் குளிரூட்டும் மையத்தை திறந்து வைப்பதற்காகவும், வட்டாட்சியர் அலுவலக மேம்பாடு பணியை துவக்கி வைப்பதற்காகவும் போக்குவரத்து துறை மற்றும் மின்சார துறை அமைச்சர் சா சி சிவசங்கர் இன்று குன்னம் பகுதிக்கு வருகை தர உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 26, 2025
பெரம்பலூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

பெரம்பலூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 26, 2025
பெரம்பலூர் இளைஞர் சாதனை

பெரம்பலூர் கேகே நகரை சேர்ந்த மணிகண்டன் (26) என்பவர் மும்பையில் நடைபெற்ற அமெச்சூர் ஒலிம்பியா இந்தியா என்ற பாடிபில்டர் போட்டியில் பங்கேற்றார். இந்தப் போட்டியில் உலகம் முழுவதிலிருந்து 150 பேர் கலந்து கொண்ட இப்போட்டியில் மணிகண்டன் தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். பெரம்பலூரின் புகழை நிலைநாட்டியதாக மக்கள் அனைவரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


