News August 7, 2024
பெரம்பலூர் ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம்

ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் பெரம்லூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் இன்று 07.08.2024 நடைபெற்றது. இதில் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
Similar News
News November 14, 2025
பெரம்பலூரில் TVK சார்பில் போராட்டம்!!!

பெரம்பலூர் மாவட்ட தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அவர்கள் உத்தரவுபடி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில், பல்வேறு குளறுபடிகளை கண்டித்து, தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் (நவ-16) அன்று ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி மனுவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேராவிடம், இன்று (நவ-14) மாவட்ட செயலாளர் சிவகுமார் தலைமையில், மாவட்ட, ஒன்றிய, நிர்வாகிகள் ஒன்றாக மனு அளித்தனர்.
News November 14, 2025
பெரம்பலூர்: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். இதனை ஷேர் பண்ணுங்க!
News November 14, 2025
பெரம்பலூர்: வரலாற்று சிறப்பு மிக்க இடம் பற்றி தெரியுமா?

பெரம்பலூர் மாவட்டம் சாத்தனூர் கிராமத்தில் புகழ்பெற்ற தேசிய கல்மரப் பூங்கா உள்ளது. இங்கு சுமார் 120 மில்லியன் ஆண்டுகள் பழமையான மரம் ஒன்று கல்லாக மாறியிருக்கிறது. 1940ம் ஆண்டு தஞ்சாவூரில் இருந்து வந்த, இந்தியப் புவியியல் ஆய்வு மையத்தின், புகழ்பெற்ற புவியியலாளரான டாக்டர் எம்.எஸ். கிருஷ்ணனால் இது கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அனைவரும் தெரிந்து கொள்ள இதை உடனே ஷேர் பண்ணுங்க!


