News December 31, 2024
பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலை

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் வெள்ளி விழாக் கொண்டாட்டத்தை முன்னிட்டு பல்வேறு போட்டிகள், கருத்தரங்கம், கவியரங்கம் நிகழ்த்தப்படுகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் வள்ளுவரின் சிலை இருப்பதை உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று (டிச.30) பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. வான்புகழ் கொண்ட வள்ளுவனின் புகழ் பரவட்டும், புத்தொளி பிறக்கட்டும்
Similar News
News December 6, 2025
பெரம்பலூர்: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க!
News December 6, 2025
பெரம்பலூர்: பழங்குடியினரை தேடிச்சென்ற ரேஷன் அட்டைகள்

பெரம்பலூர் மாவட்டத்தில் 48 மலைவாழ் பழங்குடியின குடும்பங்களுக்கு, ரேஷன் அட்டை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட வழங்கல் அலுவலர் சக்திவேல் தெரிவித்தார். மேலும் ஆட்சியர் மிருணாளினி ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கு விரைவாக வழங்க அலுவலர்களுக்கு அறிவுறுத்திய நிலையில், கோரையாறில் மலைவாழ் பழங்குடியின தம்பதியான விக்னேஷ், பிருந்தாவுக்கு ரேஷன் அட்டையை சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சுகுணா நேற்று வழங்கினார்.
News December 6, 2025
பெரம்பலூர்: 3வது நாளாக புறக்கணிப்பு

பெரம்பலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் 3-வது நாளாக கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட அளவிலான விசாரணை கோர்ட்டுகளில் இ-பைலிங் முறையை கடந்த 1-ந்தேதி முதல் போதுமான கட்டமைப்பு மற்றும் இணையதள வசதிகளை ஏற்படுத்தி கொடுக்காமல், நடைமுறைப்படுத்துவதை நிறுத்தி வைக்க வேண்டி கடந்த 3 நாட்களாக வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.


