News August 7, 2024
பெரம்பலூர் ஆட்சியர் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கால்நடைகளுக்கும் இந்த மாதம் 21ஆம் தேதி வரை தோல் கழலை நோய் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, அருகிலுள்ள கால்நடை மருத்துவனைக்கு சென்று தங்களது பசு மற்றும் எருமைகளுக்கு தவறாமல் தடுப்பூசியினை போட்டுக்கொண்டு நோய் வராமல் பாதுகாத்துக்கொள்ளும் படி ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் நேற்று தெரிவித்துள்ளார். இந்த தகவலை ஷேர் செய்யவும்.
Similar News
News December 19, 2025
பெரம்பலூர்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாளகத்தில் உள்ள வாக்கு பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பறையில் நடைபெற்று வரும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் நிலை சரி பார்ப்பு பணிகள் நேற்று (18.12.2025) பார்வையிடப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரியான மிருணாளினி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஆய்வு செய்தார்.
News December 19, 2025
பெரம்பலூர்: ஆட்டோ வாங்க ரூ.3 லட்சம்!

பெரம்பலூர் மக்களே மின்சார ஆட்டோ வாங்க பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிருக்கு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், கூட்டுறவு வங்கிகள் மூலமாக ரூ. 3 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் 1,000 பேருக்கு கடன் வழங்கப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வாகன விலை விவர அறிக்கை, வருமானச் சான்று, ஆதார், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களுடன் உங்களுக்கு அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகளை அணுகலாம்.
News December 19, 2025
பெரம்பலூர்: 75 நாட்களில் 1.5 லட்சம் திட்டம்!

பெரம்பலூர் மாவட்டம், எறையூர் பகுதியில், ஜவஹர்லால் நேரு பொதுத்துறை சர்க்கரை ஆலை உள்ளது. சர்க்கரை ஆலையின் தலைமை நிர்வாகியான, டிஆர்ஓ பன்னீர்செல்வம் தலைமையில் நடப்பு (2025-2026) ஆண்டுக்கான அரவைப் பணிகளுக்காக ஆலை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சர்க்கரை ஆலையில் இன்று முதல் அரவைப் பணிகள் தொடங்கவுள்ள சூழலில், 75 நாட்களில் சுமார் 1.5 லட்சம் டன் கரும்புகளை அரைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.


