News August 17, 2024
பெரம்பலூர் அருகே அமைச்சர் அடிக்கல் நாடினார்

ஆலத்தூர் ஒன்றிய பகுதிகளில் முதலமைச்சர் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், இலந்தங்குழி முதல் ஆலத்தூர்- அரியலூர் சாலை இணைப்பு வரை தார் சாலை அமைக்கும் பணிக்கன பூமி பூஜை இன்று நடைபெற்றது. இந்த பூஜையை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர், ஆலத்தூர் ஒன்றிய தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Similar News
News November 15, 2025
பெரம்பலூர் காவல் கண்காணிப்பாளர் விழிப்புணர்வு கூட்டம்

பெரம்பலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா நேற்று (நவ-14) விழிப்புணர்வுக் கலந்தாய்வுக் கூட்டத்தை நடத்தினார். இதில் மாவட்டத்திலுள்ள அனைத்து நகைக்கடை மற்றும் நகை அடகு கடை உரிமையாளர்களும் கலந்துகொண்டனர். மேலும் கடைகளின் பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்தும், கொள்ளைச் சம்பவங்களைத் தடுப்பது குறித்தும் முக்கிய ஆலோசனைகள் இக்கூட்டத்தில் நகை கடை உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது.
News November 15, 2025
பெரம்பலூர்: லாரியில் மோதி வாலிபர் பரிதாப பலி

அரியலூர் மாவட்டம், பொய்பூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் குன்னம் அருகே தங்கநகரம் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, லாரியில் மோதிய விபத்தில் உயிரிழந்தார். இது குறித்து குன்னம் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 15, 2025
பெரம்பலூரில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

பெரம்பலூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் சார்பில், அரும்பாவூர் தனியார் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் வளர் இளம் பருவ மாணவர்களுக்கான வாழ்வியல் திறன் கல்வி மற்றும் நன்னெறிகள் குறித்து பேசப்பட்டது. இதில் கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனை நம்பிக்கை மைய ஆற்றுப்படுத்துனர் பழனிவேல் ராஜா, பால்வினை நோய்கள் குறித்து உரையாற்றினார்.


