News April 16, 2025
பெரம்பலூர்: அனைத்தும் அருளும் மதுரகாளியம்மன்

பெரம்பலூர் மாவட்டம் சிருவாச்சூரில் மதுரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்தி வாய்ந்த தெய்வமான மதுரகாளியை திருமண வரம், குழந்தைப்பேறு வேண்டுவோர் அதிகமாக வந்து வழிபடுகின்றனர். மேலும், உடல் உபாதைகள், தொழில் சிக்கல் ஆகியவற்றுக்கும் அம்மன் தீர்வை அருள்வதாக ஐதீகம். நேர்த்திக்கடனாக உடலில் வயிறு, நெஞ்சு, போன்ற இடங்களில் மாவிளக்கு ஏற்றி வழிபடுகின்றனர். உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க…
Similar News
News December 17, 2025
பெரம்பலூர்: சொந்த ஊரில் தொழில் தொடங்க வாய்ப்பு!

PMFME எனும் திட்டம் மூலம் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க அரசு சார்பில், ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கபடுகிறது. இதன் மூலம், இளைஞர்கள் உணவுப் பதப்படுத்துதல், ஊறுகாய் தயாரித்தல், எண்ணெய் மில் மற்றும் பால் பண்ணை அமைத்தல் போன்ற தொழில்களை தொடங்கலாம். இதற்கு உங்கள் அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் அல்லது <
News December 17, 2025
பெரம்பலூர்: வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில், 19.12.2025 வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் 2 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்த ஆண், பெண் கலந்து கொள்ளலாம். விருப்பம் உள்ளோர் https://www.tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். விவரங்களுக்கு 04328-296352-ஐ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.
News December 17, 2025
பெரம்பலூர்: கிளைச் சிறையில் ஆட்சியர் ஆய்வு

பெரம்பலூர் கிளைச் சிறையில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தர ஒன்றை பிறப்பித்தது. அதன்படி, பெரம்பலூர் கிளைச் சிறையில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள், சிறைக் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் உள்ளிட்டவை தொடர்பாக முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் காவல் கண்காணிப்பாளருடன் நேற்று (டிச.16) மாவட்ட ஆட்சியர் மிருணாளினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


