News August 24, 2024
பெரம்பலூரில் 2,16,624 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்

பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க மருந்து வழங்கும் முகாம் நேற்று நடைபெற்றது. இத்திட்டத்தின் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 1,71,590 குழந்தைகள் மற்றும் மாணவர்கள் 45,034 பெண்கள் என மொத்தம் 2,16,624 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.முன்னதாக குடற்புழு நீக்க நாள் உறுதிமொழியை கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் மாணவ மாணவிகள் ஏற்றுக் கொண்டனர்.
Similar News
News November 14, 2025
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

பெரம்பலூர் மாவட்டத்தில், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் முன்னாள் படைவீரரின் மனைவி, கைம்பெண் மற்றும் திருமணமாகாத மகள்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 40 வயதிற்குட்பட்ட, அரசு அல்லது அரசு சார்ந்த நிறுவனத்தில் தையல் பயிற்சி முடித்து சான்று பெற்றவர்கள் நவ.30க்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News November 14, 2025
பெரம்பலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று (நவ.13) இரவு 10 மணி முதல் இன்று (நவ.14) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
News November 13, 2025
பெரம்பலூரில் புதிய வருவாய் அலுவலர் பதவி ஏற்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று (நவ-13) புதிய வருவாய் அலுவலராக கண்ணன் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இதனை ஒட்டி மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், வருவாய் மாவட்ட சங்க தலைவர் குமரி ஆனந்தன் தலைமையில் மரியாதை நிமித்தமாக மாவட்ட வருவாய் அலுவலரை நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.


