News April 10, 2025
பெரம்பலூரில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித் தொகை

பெரம்பலூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 14, 2025
பெரம்பலூர்: அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளிடம் பெண்குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர் 13.10.2025 விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் பெண்குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்தும், குழந்தை திருமணம் தடுப்பு, உள்ளிட்டவை குறித்து விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
News October 14, 2025
பெரம்பலூர்: மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தில், மின் நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம், இன்று (அக்.14) மின்வாரியச் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு மின்வாரியத்தின் மேற்பார்வைப் பொறியாளர் மேகலா தலைமை தாங்குகிறார். மின் கட்டணம், மின் விநியோகத்தில் ஏற்படும் தடங்கல்கள், புதிய இணைப்புகள் மற்றும் மின்வாரியம் தொடர்பான பிற குறைபாடுகளை பொதுமக்கள் கூட்டத்தில் நேரடியாகத் தெரிவித்து தீர்வு பெறலாம்.
News October 14, 2025
பெரம்பலூர்: தீபாவளிக்கு பலகாரம் வாங்க போறீங்களா?

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், நாம் பலரும் பேக்கரி மற்றும் உணவகங்களில் இனிப்பு உணவு வகைகளை வாங்குவது வழக்கம். இந்நிலையில் அப்படி வாங்கப்படும் பொருட்கள் தரமில்லாமல் இருந்தால் என்ன செய்வதென்று பலருக்கும் தெரியாது. இதுபோன்ற சூழல் உங்களுக்கு ஏற்பட்டால் ‘94440 42322’ என்ற வாட்ஸ்அப் எண்ணின் வாயிலாக தமிழக உணவுப் பாதுகாப்பு துறையிடம் உங்களால் வீட்டிலிருந்தே புகார் அளிக்க முடியும். ஷேர் பண்ணுங்க!