News March 5, 2025
பெரம்பலூரில் வேலைவாய்ப்பு முகாம்

பெரம்பலூா் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில், பெரம்பலூா் தண்ணீா் பந்தல் தந்தை ஹேன்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாா்ச் 8 ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். பெரம்பலூர் சுற்றுவட்டார மக்கள் இதில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Similar News
News September 17, 2025
பெரம்பலூர்: விவசாயத்திற்கு ₹1 கோடி வரை கடன் உதவி

பெரம்பலூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வு கூட்டம் வங்கியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஓர் தனி விவசாயிக்கு ₹50 லட்சம் முதல் ₹ 1 கோடி வரை வழங்கப்பட உள்ளது என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 17, 2025
பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் தகவல்!

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு (17.09.2025) காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு, பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மிருணாளினி தலைமையில் நடைபெற உள்ளது என, பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இன்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 16, 2025
பெரம்பலூர் வருகை தர உள்ள சீமான்

பெரம்பலூர் நகராட்சி பகுதியான புதிய பேருந்து நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் வரும் செப்டம்பர் 20ஆம் தேதி சனிக்கிழமை நடக்க இருக்கிறது. இந்த கூட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகை தரஉள்ளார். சீமான் வருகையொட்டி நாம் தமிழர் கட்சியினர் தீவிர பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.