News August 24, 2024
பெரம்பலூரில் விவசாயிகள் குறைதீர்க்கும்

மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் 30-8 2024 அன்று 10:30 மணி அளவில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் வேளாண்மை சம்பந்தமான விவசாய கடன், இடுபொருள், நலத்திட்ட உதவிகள், விவசாயிகள் சம்பந்தமான அனைத்து குறைகளும் விவாதிக்கப்படும் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தகவல் அளித்துள்ளார்.
Similar News
News December 19, 2025
பெரம்பலூர்: ஆட்டோ வாங்க ரூ.3 லட்சம்!

பெரம்பலூர் மக்களே மின்சார ஆட்டோ வாங்க பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிருக்கு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், கூட்டுறவு வங்கிகள் மூலமாக ரூ. 3 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் 1,000 பேருக்கு கடன் வழங்கப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வாகன விலை விவர அறிக்கை, வருமானச் சான்று, ஆதார், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களுடன் உங்களுக்கு அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகளை அணுகலாம்.
News December 19, 2025
பெரம்பலூர்: 75 நாட்களில் 1.5 லட்சம் திட்டம்!

பெரம்பலூர் மாவட்டம், எறையூர் பகுதியில், ஜவஹர்லால் நேரு பொதுத்துறை சர்க்கரை ஆலை உள்ளது. சர்க்கரை ஆலையின் தலைமை நிர்வாகியான, டிஆர்ஓ பன்னீர்செல்வம் தலைமையில் நடப்பு (2025-2026) ஆண்டுக்கான அரவைப் பணிகளுக்காக ஆலை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சர்க்கரை ஆலையில் இன்று முதல் அரவைப் பணிகள் தொடங்கவுள்ள சூழலில், 75 நாட்களில் சுமார் 1.5 லட்சம் டன் கரும்புகளை அரைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
News December 19, 2025
பெரம்பலூர்: ஆட்சியரகத்தில் சிறப்பு கடன் முகாம்

பெரம்பலூர் மாவட்ட தொழில் மையம் மற்றும் பல்வேறு துறைகளின் சார்பில், பொதுமக்களுக்கு கடன் வழங்கும் முகாம் நேற்று மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மேலும் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், 34 பயனாளிகளுக்கு ரூ.1.16 கோடி மதிப்பில் கடனுதவிகளை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பல்வேறு முன்னோடி வங்கிகள் மற்றும் அரசு அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


