News April 5, 2025
பெரம்பலூரில் மின்நுகர்வோர் சிறப்பு முகாம்

பெரம்பலூரில் இன்று (ஏப்.05) மின் நுகர்வோர் குறைதீர்ப்பு முகாம் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது. காலை 11 முதல் மாலை 5 வரை நடைபெறும் இந்த முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு மின் கட்டணம், பழுதான மின்னளவி மாற்றுவது, குறைந்த மின்னழுத்தம் தொடர்பான புகார்களை நேரடியாக தெரிவிக்கலாம் என பெரம்பலூர் மின் பகிர்மானவட்ட மேற்பார்வை பொறியாளர் மேகலா தெரிவித்துள்ளார். இதை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் SHARE செய்ங்க.
Similar News
News November 15, 2025
பெரம்பலூரில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

பெரம்பலூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் சார்பில், அரும்பாவூர் தனியார் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் வளர் இளம் பருவ மாணவர்களுக்கான வாழ்வியல் திறன் கல்வி மற்றும் நன்னெறிகள் குறித்து பேசப்பட்டது. இதில் கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனை நம்பிக்கை மைய ஆற்றுப்படுத்துனர் பழனிவேல் ராஜா, பால்வினை நோய்கள் குறித்து உரையாற்றினார்.
News November 15, 2025
பெரம்பலூர் : கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

பெரம்பலூர் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News November 15, 2025
பெரம்பலூர்: இலவச ஆயத்தப் பயிற்சி – ஆட்சியர் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில், மீனவ சமுதாயத்தைச் சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணித் தேர்வுகளில் சேருவதற்கான இலவச ஆயத்தப் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், ஆண்டுதோறும் 20 இளைஞர்களுக்கு இந்தப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கு அரியலூர் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


