News May 16, 2024

பெரம்பலூரில் மழை பெய்யும்

image

தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக பெரம்பலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சில நாட்களாக வாட்டி வந்த வெயில் காரணமாக, இம்மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News

News November 23, 2025

பெரம்பலூர்: சிறப்பு கல்விக் கடன் முகாம் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் சிறப்பு கல்விக் கடன் முகாம், வரும் நவம்பர் 27-ம் தேதி அன்று நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இம்முகாமில், இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவிகள் தேவையான ஆவணங்களுடன் கலந்துகொண்டு கல்விக்கடன் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News November 23, 2025

பெரம்பலூர்: சாலையில் கவிழ்ந்த வாகனம்

image

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், கூடலூர் சாலையில் சென்று கொண்டிருந்த கழிவு நீர் சுத்தப்படுத்தும் செப்டிக் டேங்க் வாகனம், சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. மேலும் வாகனத்தை ஜேசிபி இயந்திரம் கொண்டு பள்ளத்தில் இருந்து அகற்றப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.

News November 22, 2025

பெரம்பலூர்: 10th போதும் அரசு வேலை ரெடி!

image

மத்திய உளவுத்துறையில் காலியாக உள்ள Multi Tasking Staff (General) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.பணியின் வகை: மத்திய அரசு வேலை
2.பணியிடங்கள்: 362
3. வயது: 18-25 (SC/ST-30,OBC-28)
4. சம்பளம்: ரூ.18,000 – 56,900/-
5. கல்வித் தகுதி: 10th
6. கடைசி தேதி: 14.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: CLICK <>HERE<<>> .
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.

error: Content is protected !!