News January 2, 2025
பெரம்பலூரில் பணம் மற்றும் பொருட்கள் கொள்ளை

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட, கல்யாண் நகரில் சுரேஷ் மற்றும் யோகேஷ் சர்மா என்பவர்களது எலக்ட்ரானிக் கடையிலும்,சக்தி என்பவரது போட்டோ ஸ்டுடியோவின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் ரூ.27000 பணமும் ரூ.2,50,000 மதிப்புள்ள பொருட்களை நேற்றிரவு மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News July 11, 2025
பெரம்பலூர்: மாணவர்களுக்கு திறன் பயிற்சி அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் தொழில் நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரத்தினை முன்னிட்டு பல்வேறு தொழில் நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் ஜூலை 15 வரை நடைபெறவுள்ளன. ஆகவே, அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கு திறன் பயிற்சி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஜூலை 15-ம் தேதி அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் பெரம்பலூர் மற்றும் குன்னத்தில் நடைபெற உள்ளது என ஆட்சியர் அறிவித்துள்ளார். SHARE IT NOW…
News July 11, 2025
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரத்தினை முன்னிட்டு பல்வேறு தொழில்நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் (ஜூலை 15) வரை நடைபெறவுள்ளன. அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கு திறன் பயிற்சி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி (ஜூலை 15) அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் பெரம்பலூர் மற்றும் குன்னத்தில் நடைபெற உள்ளது என கலெக்டர் அறிவித்துள்ளார்.
News July 10, 2025
மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா தலைமையில் இன்று (ஜூலை 10) மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகள் முன்னிலையில் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகள் குறித்து ஆய்வு செய்தும் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்க ஆலோசனையும் வழங்கினார்.