News January 2, 2025
பெரம்பலூரில் பணம் மற்றும் பொருட்கள் கொள்ளை

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட, கல்யாண் நகரில் சுரேஷ் மற்றும் யோகேஷ் சர்மா என்பவர்களது எலக்ட்ரானிக் கடையிலும்,சக்தி என்பவரது போட்டோ ஸ்டுடியோவின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் ரூ.27000 பணமும் ரூ.2,50,000 மதிப்புள்ள பொருட்களை நேற்றிரவு மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News October 24, 2025
பெரம்பலூரில் 3 பெண்கள் உட்பட 12 பேர் கைது!

பெரம்பலூர் மாவட்டத்தில் பில்லங்குளம், வெண்பாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர். இதில் சட்ட விரோதமாக அரசு மது பாட்டில்களை விற்பனை செய்த பாண்டியன், பார்த்திபன், மருதமுத்து, ராஜா, அருண், தனம், பவுனாம்பாள், செல்வக்குமார், மதியழகன், ராஜந்திரன், ஜெயபால், கோமதி ஆகியோர்களை கைது செய்து, வழக்குப்பதிந்து; அவர்களிடமிருந்து மொத்தம் 573 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
News October 24, 2025
பெரம்பலூர்: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு!

பெரம்பலூர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News October 24, 2025
பெரம்பலூர்: இலவச சட்ட உதவி வேண்டுமா?

பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி ஆலோசனை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போன்ற பல்வேறு வழக்குகளுக்கு வாதாட இலவசமாக வழக்கறிஞர் உதவியை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தகவலுக்கு பெரம்பலூர் மாவட்ட சட்ட ஆலோசனை மையத்தை (04328-296206) தொடர்பு கொள்ளலாம். இதை மறக்காமல் SHARE செய்யவும்!


