News November 10, 2024

பெரம்பலூரில் கஞ்சா விற்றவர் கைது

image

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பாடாலூர் போலீசார் ரோந்து சென்றனர். பாடாலூர் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே டூ வீலரில் நின்று கொண்டிருந்த பார்த்திபன் (20) என்ற நபரை விசாரணை செய்தபோது அதில் 100 கிராம் அளவுள்ள கஞ்சா பொட்டலத்தை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிந்தது. தொடர்ந்து பார்த்திபனை கைது செய்து அவரிடமிருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Similar News

News December 12, 2025

பெரம்பலூர் மாவட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

image

தமிழகத்தில் பெரம்பலூர் மாவட்டம் மிக முக்கிய மாவட்டமாகும். இம்மாவட்டத்தில்
1. மொத்த பரப்பளவு: 1,752 km2
2. மொத்த மக்கள்தொகை: 5,65,223 (2011)
3. சட்டமன்ற தொகுதிகள்: 2
4. பாராளுமன்ற தொகுதி: 1
5. வட்டங்கள்: 04
6. பேரூராட்சிகள்: 04
7. நகராட்சி: 1
இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News December 12, 2025

பெரம்பலூர்: பொதுமக்கள் குறைதீர் முகாம் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில், உணவுப்பொருள் வழங்கல் தொடர்பான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நாளை (டிச.13) நடைபெற உள்ளது. மேலும் ​குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் மற்றும் பொது விநியோகத் திட்டம் சார்ந்த குறைகளுக்கு உடனடித் தீர்வுகாண, க.எறையூர், அன்னமங்கலம், பெரியம்மாபாளையம், அயினாபுரம் ஆகிய கிராமங்களில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News December 12, 2025

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், தமிழக அரசின் 2026-ம் ஆண்டிற்கான கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இவ்விருதிற்கான விண்ணப்பங்களை awards.tn.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே பதிவு செய்திட வேண்டும். மேலும் பதிவு செய்வதற்கான கடைசி தேதி (டிச.15) எனவும், தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!