News April 29, 2025
பெரம்பலூரில் உழைப்பாளர் தினத்தன்று கிராம சபை கூட்டம்

பெரம்பலூர், வேப்பந்தட்டை, வேப்பூர், ஆலத்தூர் ஆகிய 4 ஒன்றியங்களில் 121 கிராம ஊராட்சிகளளில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஷ் பஞ்சால் உத்தரவின்படி உழைப்பாளர் தினமான (மே.01) அன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது, கிராம சபையில் ஊராட்சி கிராம மக்களின் குறைகளை தீர்மானமாக நிறைவேற்றப்பட உள்ளது. பெரம்பலூர் மக்களே கிராம சபை கூட்டம் மற்றவர்களும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க.
Similar News
News December 5, 2025
பெரம்பலூர் எம்எல்ஏ-வுக்கு அமைச்சர் அழைப்பு

அரியலூர் மாவட்ட திமுக சார்பாக அரியலூரில் புதிய கலைஞர் அறிவாலயம் கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா இன்று (05-12-2025) நடைபெறவுள்ளது. இதற்கான அழைப்பிதழை நேற்று பெரம்பலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரனிடம் அமைச்சர் சிவசங்கர் வழங்கி அழைப்பு விடுத்தார்.
News December 5, 2025
பெரம்பலூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை மூலம் பிறப்பு முதல் 18 வயது வரையுள்ள மாற்றுத்திறனுடைய மாணவ-மாணவியர்களுக்கான இலவச மருத்துவ மதிப்பீட்டு முகாம் 09.12.2025 முதல் 12.12.2025 வரை நடைபெற உள்ளது. இந்த வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி தெரிவித்துள்ளார். இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க…
News December 5, 2025
பெரம்பலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று (டிச.04) இரவு 10 மணி முதல் இன்று (டிச.05) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!


