News August 2, 2024
பெரம்பலூரில் ஆபத்தான பயணம் பள்ளி மாணவர்கள்

பெரம்பலூர் நகரப் பகுதியில் வானொலி திடல் சாலையில் காலை முதல் மாலை வரை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். பெரிய விபத்து நடப்பதற்கு முன்னரே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது போன்ற ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் பள்ளி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Similar News
News December 3, 2025
பெரம்பலூர்: மானியத்துடன் மின்மோட்டார் வேண்டுமா?

விவசாயிகளுக்கு 50% மானியத்துடன் கூடிய மின்மோட்டார் மற்றும் பம்புசெட்டுகள் பெறுவதற்கு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதிதாக வாங்கப்படும் மின் மோட்டார்களின் மொத்த விலையில் ரூ.15,000/-அல்லது 50% மானியமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <
News December 3, 2025
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தகவல்!

பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகள் பயன்பாட்டிற்காக 48 டன் விதை நெல் இருப்பு உள்ளது. மேலும் விதை கொள்முதலை பொறுத்தவரை நெல்லில் 48.250 மெட்ரிக் டன்கள் இருப்பில் உள்ளது. சிறுதானியங்களில் 2.719 மெட்ரிக் டன்களும், பயறு வகைகளில் 8.469 மெட்ரிக் டன்களும், எண்ணெய் வித்து பயிர்களில் 6.468 மெட்ரிக் டன்களும் இருப்பில் உள்ளது என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.
News December 3, 2025
பெரம்பலூர்: இலவச தையல் மிஷின் வேண்டுமா?

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்!


