News April 3, 2025
பெயர் பலகைகளில் தமிழ் கட்டாயம்

திருவண்ணாமலையில் அனைத்து கடைகள், ஓட்டல்கள் மற்றும் வணிகவளாகங்களின் பெயர் பலகையில் கட்டாயம் தமிழ் இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மொழிகளான ஆங்கிலம் போன்றவை தமிழை விட சிறிய எழுத்துக்களில் பதிவிட வேண்டும் என்றும், இதனை உடனடியாக ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் மாற்ற மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் உத்தரவிட்டுள்ளார். உங்களுக்கு தெரிந்த நபர்களுக்கு ஷேர் பண்ணுங்கள்.
Similar News
News November 18, 2025
தி.மலையில் தொடரும் தீக்குளிப்பு முயற்சிகள்!

திருவண்ணாமலை கஸ்தம்படி கிராமத்தைச் சேர்ந்த சரவணன்–ஜோதி தம்பதி, நிலத்தகராறு மனுக்களுக்கு நடவடிக்கை எடுக்காததால் நேற்று (நவ.17) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். கடந்த வாரம் ஒரு தம்பதியர் தீக்குளிக்க முயன்றதில், பூங்கொடி என்பவர் உயிரிழந்தார். தொடர்ச்சியாக நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

தி.மலையில் இரவு செல்லும் காவலர்கள் விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (நவ.17) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.