News May 17, 2024

பென்னாகரம்: ஸ்ரீ அங்காளம்மனுக்கு மண்டல பூஜை

image

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த கருங்கல்மேடு பகுதியில் ஸ்ரீ அங்காளம்மன் மண்டல பூஜை நேற்று(மே 16) வெகு விமர்சியாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ அங்காள அம்மனுக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகள், சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கிடா வெட்டி பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Similar News

News October 22, 2025

ரோடு சரியில்லையா? App-ல் புகாரளிக்கலாம்!

image

தருமபுரி மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து “நம்ம சாலை” செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்.

News October 22, 2025

தருமபுரியில் ரூ.3.80 கோடிக்கு மது விற்பனை

image

தருமபுரி மாவட்டத்தில் டாஸ்மாக் மூலம் 66 மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி தருமபுரியில் உள்ள கடைகளில் ரூ.3.80 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு தீபாவளியின்போது ரூ.3.20 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையான நிலையில் இந்தாண்டில் கூடுதலாக ரூ.60 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது.

News October 22, 2025

தருமபுரி: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

தருமபுரி மாவட்டம் முழுவதும் இன்று அக்.22 இரவு இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும்.இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்

error: Content is protected !!