News March 27, 2025
பெண் பெண் மருத்துவர் தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளி கண்டுபிடிப்பு

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திற்குள் பயிற்சி பெண் மருத்துவர் தாக்கப்பட்ட வழக்கில், மருத்துவர் தெரிவித்த அங்க அடையாளங்களை வைத்து சிவகங்கை நகர் போலீசார் விசாரணை நடத்தி வந்ததில், சிவகங்கை அருகே ஆவரங்காடு பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (20) என்பவர் இதில் குற்றவாளி என நகர் போலீசார் கண்டறிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News October 20, 2025
காரைக்குடி மக்கள் கவனத்திற்கு

சென்னையிலிருந்து பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 10:30 மணிக்கு காரைக்குடி ரயில் நிலையம் வந்து சேரும். பயணிகளை பல இடங்களுக்கு ஏற்றி செல்வதற்காக 3 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இரண்டு பஸ்கள்கள் இயக்கப்பட நிலையில், பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு தற்சமயம் 3 பஸ்கள் இயக்கப்படுகின்றன. காரைக்குடி ரயில் பயணிகள் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
News October 20, 2025
சிவகங்கையில் அச்சத்தில் மக்கள் ஒரே இரவில் 5 பேர் பாதிப்பு

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் தெரு நாய்கள் கடித்து நேற்று 5 போ் காயமடைந்தனா். பேரூராட்சி பகுதியில் தெரு நாய்கள் அதிகமாக சுற்றித் திரிகின்றன. நேற்று வீதிகளில் சுற்றி திரிந்த நாய்கள் 5 பேரை கடித்து, இளையான்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். எனவே பேரூராட்சி நிா்வாகம் உடன் நடவடிக்கை எடுத்து தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
News October 20, 2025
சிவகங்கை: மழை வெள்ளம் பாதிப்புகள்.. புகார் எண்கள்!

சிவகங்கையில் அநேக இடங்களில் அடைமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் உங்கள் பகுதியில் மழையால் ஏற்படும் பாதிப்புகளான, வெள்ளம், மின்தடை மற்றும் அத்தியாவசியத் தேவைகள் குறித்து தகவல் தெரிவிக்க இந்த எண்ணை Save பண்ணிக்கோங்க மாநில உதவி எண் – 1070, மாவட்ட உதவி எண்- 1077, அவசர மருத்துவ உதவி – 104 என்ற எண்கள் மழைக்காலங்களில் தேவைப்படலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.