News August 14, 2024
பெண் குழந்தைகள் விருது பெற விண்ணப்பிக்கலாம்

காஞ்சிபுரத்தில் பெண் குழந்தைகள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்கு பங்காற்றும் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேசிய பெண் குழந்தை தினமான ஜன.24 ஆம் தேதி மாநில அரசின் விருதுடன் ரூ.1 லட்சம் வழங்கப்படும். இந்த விருதுக்கு நவ.20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 25, 2025
காஞ்சிபுரத்தில் லஞ்சம் கேட்டால் உடனே Call

காஞ்சிபுரம் மக்களே.., போலீஸ், தாசில்தார், எம்.எல்.ஏ, கார்ப்பரேஷன் மற்றும் இதர அரசு அலுவலர்கள், தங்கள் பணிகளை முறையாக செய்யாமல் லஞ்சம் கேட்டால் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (044-27237139) புகாரளிக்கலாம். உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தகவலை உடனே உங்களது நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News December 25, 2025
காஞ்சிபுரம்: தொழிற்சாலை ஊழியர் மர்ம சாவு!

திருப்போரூர்: வேம்படி விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ்(50). இவர், ஆலத்தூரில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் பணியில் இருந்த போது மூச்சிட் திணறல் ஏற்பட்டு மயங்கு விழுந்தார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது ஏற்கனவே இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News December 25, 2025
காஞ்சி: மூதாட்டியை உல்லாசத்திற்கு அழைத்த வாலிபர்!

உத்திரமேரூர் அடுத்த கோழியாளம் கிராமத்தில் வசிப்பவர் அசோக்(20). இவர், 65 வயது மூதாட்டியின் விவசாய நிலத்தில் நெல் மூட்டைகளை அடுக்குவதற்காக சென்றார். அப்போது அந்த மூதாட்டியிடம் ’உல்லாசமாக இருக்கலாம்..’ என அழைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, மூதாட்டி அளித்த புகாரின் பேரில் உத்திரமேரூர் போலீசார் வழக்கு பதிந்து, விசாரிக்கின்றனர்.


