News August 7, 2024
பெண் குழந்தைகள் திட்டத்தில் விண்ணப்பிக்க அழைப்பு

சமூக நலத்துறையின் கீழ் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தேனி மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து வைப்புத்தொகை ரசீது பெற்ற பயனாளிகளில் முதிர்வுத் தொகை கிடைக்க பெறாமல் உள்ள 18 வயது நிரம்பிய பயனாளிகள் முதிர்வுத்தொகை பெற விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூக நல அலுவலகத்தை அனுகலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 22, 2025
மாநில கலைத் திருவிழா போட்டிக்கு 401 மாணவர்கள் தேர்வு

தேனி மாவட்ட பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டிகளில் முதலிடம் பெற்ற 401 மாணவ, மாணவிகள் மாநில போட்டிக்கு தேர்வாகினர். மாநில கலைத் திருவிழா போட்டிகள் நவ.25, 26, 27, 28 ஆகிய 4 நாட்கள் கரூர், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, சேலம் மாவட்டங்களில் நடைபெறவுள்ளது. இவர்களை வாகனங்களில் அழைத்து செல்லும் ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை செய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல்.
News November 22, 2025
தேனி மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கை

தேனி மாவட்டம் தேனி தேர்தல் அதிகாரி மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ் ஐ ஆர் படிவம் எவ்வாறு நிரப்புவது என்பது சம்பந்தமாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் இரண்டு விதமாக நிரப்புவது சம்பந்தமாக அறிக்கையானது வெளியிடப்பட்டது. அதில் ஒன்று 2002ல் ஓட்டுரிமை இருந்தால் எப்படி படிவம் நிரப்புவது, மற்றொன்று அப்பா, அம்மா ஆகியோருக்கு ஓட்டுரிமை இருந்தால் எவ்வாறு நிரப்புவது என்று ஒரு அறிக்கை வெளிவந்துள்ளது.
News November 22, 2025
தேனி: கார் மோதி பைக்கில் சென்ற தம்பதி படுகாயம்

போடி பகுதியை சேர்ந்தவர் ராஜா (49). இவர் நேற்று முன்தினம் அவரது மனைவி கலைச்செல்வி என்பவருடன் தேவாரம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்பொழுது இவர்களுக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத கார் இவர்களது இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் தம்பதியர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து போடி தாலுகா போலீசார் வழக்கு (நவ.21) பதிவு செய்துள்ளனர்.


