News April 10, 2025
பெண் எஸ்.எஸ்.ஐ-க்கு வாக்கி-டாக்கியில் பறந்த உத்தரவு

அரியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் எஸ்.எஸ்.ஐ.யாக பணியாற்றிய சுமதி, கற்பழிப்பு தொடர்பாக புகார் அளிக்க வந்த பெண்ணிடம் தகாத வார்த்தைகளில் பேசி, புகாரை ஏற்க மறுத்துள்ளார். இந்த விவகாரம் டி.ஐ.ஜி. வருண்குமார் கவனத்திற்கு சென்றதால், அவர் வாக்கி-டாக்கி மூலம் இன்ஸ்பெக்டரிடம் விசாரணை நடத்தி, வாக்கி-டாக்கியிலேயே எஸ்.எஸ்.ஐ சுமதி-யை இடமாற்றம் செய்ய உத்தரவிட்டார்.
Similar News
News November 16, 2025
அரியலூர்: திருட்டில் உடந்தையாக இருந்த 5 போலீசார்!

அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஷ்வேஷ் பா.சாஸ்திரி, பொதுமக்களிடம் முறையான அணுகுமுறையின்றி கடுமையாக நடந்து கொண்டது, மணல் திருட்டில் குற்ற வாளிகளுக்கு உடந்தையாக இருந்தது மற்றும் போலீசாரின் தனிப்பிரிவில் இருந்து கொண்டு முறையாக தகவல்கள் அளிக்காத போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதன்படி தூத்தூர் மற்றும் விக்கிரமங்கலம் போலீசை சேர்ந்த 5 போலீசாரை வேறு இடத்திற்கு பணிமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
News November 16, 2025
அரியலூர்: இரவு ரோந்து காவலர்களின் விவரம்

அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை குறைக்கும் வகையில், அரியலூர் மாவட்டம் முழுவதும் தினம்தோறும் அரியலூர் மாவட்ட காவல் துறையினர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ரோந்து பணி செல்லக்கூடிய காவலர்களின் தொடர்பு எண் மாவட்ட காவல்துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளது. ஏதேனும் அவசர காலத்தில் இந்த எண்ணை தொடர்ப்பு கொள்ளலாம்.
News November 15, 2025
அரியலூர் நூறாவதாக பிரசவித்த தாய்க்கு நினைவு பரிசு

அரியலூர் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த ஆண்டு மார்ச் 25 அன்று முதல் செயல்பட தொடங்கியது. இங்கு நடைபெற்ற பிரசவங்கள் அனைத்தும் சுகப்பிரசவமாக நடைபெற்றுள்ளது. மேலும் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் நூறாவதாக பிரசவித்த தாய் மற்றும் சேய்க்கு நினைவு பரிசை மாவட்ட சுகாதார அலுவலர் மணிவண்ணன் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கார்த்திகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


